Theriyaatho Nokku Song Lyrics
Share

Movie Name : Soorya Gandhi (1973)
Song Name: Theriyaatho Nokku – Song Lyrics
Music : M.S. Vishwanathan
Singer : Manorama
Lyricist : Vaali
Theriyaatho Nokku – Song Lyrics
ஓ…. மேரி தில்ரூபா
ஹே… மேரா திவானா
ஓ… மேரி தில்ரூபா
ஹே….மேரா திவானா
உன் ஆசை கிளி மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
உன் ஆசை கிளி மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
நாலு பக்கமும் சுவர் எழுப்பி நான்
நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜகானை போல் காதல் போதையில்
கவிதை நூறு சொல்வேன்
நாலு பக்கமும் சுவர் எழுப்பி நான்
நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜகானை போல் காதல் போதையில்
கவிதை நூறு சொல்வேன்
என் திராட்சை கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
என் திராட்சை கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
ஓ…. மேரி தில்ரூபா
ஹே ….மேரா திவானா
உன் வீட்டிற்கு ஜன்னல்கள் ஏனோ
என்னை ஓயாமல் நீ பார்க்க தானோ
உன் வீட்டிற்கு ஜன்னல்கள் ஏனோ
என்னை ஓயாமல் நீ பார்க்க தானோ
உன் பார்வை பட்டதும் பனியை போலவே
உருகி போனவள் நானோ …
நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட
உன் பக்கத்துக்கு வீடெந்தன் வீடு
நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட
உன் பக்கத்துக்கு வீடெந்தன் வீடு
நீ ஊரை மாற்றலாம் வீட்டை மாற்றலாம்
உள்ளம் மாறுமோ கூறு
மனம் உன்னோடு பின்னொடும் போது
இனி நான் வேறு நீ வேறு ஏது
மனம் உன்னோடு பின்னொடும் போது
இனி நான் வேறு நீ வேறு ஏது
ஓ…. மேரி தில்ரூபா
ஹே ….மேரா திவானா
உன் ஆடைகள் மேல்நாட்டு பாணி
நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஆடைகள் மேல்நாட்டு பாணி
நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஜாடை என்னவோ ஜாதி முல்லையோ
சிலை கொடுத்ததோ மேனி…
என் பொன்னான கன்னத்தை கேட்டு
உன் எண்ணத்தின் வண்ணத்தை தீட்டு
உன் சொந்தம் ஆனபின்
எந்தன் மேனியே தொட்டு பேசுமோ காற்று
ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்
ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்
உன் ஆசை கிளி மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
உன் திராட்சை கொடி காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
ஓ… மேரி தில்ரூபா
ஹே …மேரா திவானா…

Follow Us