Type to search

60's Nostalgics Tamil Song Lyrics

Yaarodum Pesakkoodathu Song Lyrics

Share

Movie Name : Ooty Varai Uravu (1967)
Song Name: Yaarodum Pesakkoodathu – Song Lyrics
Music : M. S. Vishwanathan
Singer : L. R. Eswari, P. B. Srinivas
Lyricist : Kannadasan

Yaarodum Pesakkoodathu – Song Lyrics

Male : Yaarodum Pesa Koodaadhu
Female : Aagattum
Male : Kettaalum Solla Koodaadhu
Female : Aagattum

Female : Nee Mattum Maara Koodaadhu
Male : Aagattum
Female : Verondrai Naada Koodaadhu
Male : Aagattum

Female : Ullathil Illaadhadhu
Sollukko Varaadhadhu
Ennendru Orae Murai Sollalaamaa

Male : Kannathilaa Udal Vannathilaa
Kannathilaa Udal Vannathilaa
Maangani Oorum Sevvaayin Kinnathilaa

Female : Aa Haahahaa

Male : Muthu Pol Undaavadhu
Mullai Poo Sendaavadhu
Innum Naan Sollaadhadhai Sollalaamaa

Female : Sollungalaen Pennai Vellungalaen
Sollungalaen Pennai Vellungalaen
Vanna Tholodu Thol Saera Nillungalaen

Female : Bakthikkum Illaadhadhu
Mukthikkum Vidaadhadhu
Thithikkum Adhaa Idhu Enna Inbam

Male : Inbam Varum Adhu Innum Varum
Inbam Varum Adhu Innum Varum
Konjam Naalaaga Naalaaga Sorgam Varum

Female : Hmm Hmm Hmmm…

Male : Mandrathil Vizhaa Varum
Manjathil Nilaa Varum
Endraikkum Idhae Sugam Vilaiyaadum

Female : Manjathilaa Ungal Nenjathilaa
Manjathilaa Ungal Nenjathilaa
Andha Mananaalai Oor Ketkka Sollattumaa

Female : Hmm Hmm Hmmm…

Male : Yaarodum Pesa Koodaadhu
Female : Aagattum
Male : Kettaalum Solla Koodaadhu
Female : Aagattum

Female : Nee Mattum Maara Koodaadhu
Male : Aagattum
Female : Verondrai Naada Koodaadhu
Male : Aagattum

Female : Aa…Aaa…Aa…Aa…Aaa…Aa..Aaa…
Haaa Ha Ha Haaaa
Male : Aaahaa Haaaaa…

===========================

Yaarodum Pesakkoodathu – Song Lyrics

ஆண் : யாரோடும் பேசக் கூடாது
பெண் : ஆகட்டும்
ஆண் : கேட்டாலும் சொல்லக் கூடாது
பெண் : ஆகட்டும்

பெண் : நீ மட்டும் மாறக் கூடாது
ஆண் : ஆகட்டும்
பெண் : வேறொன்றை நாடக் கூடாது
ஆண் : ஆகட்டும்

பெண் : உள்ளத்தில் இல்லாதது
சொல்லுக்கோ வராதது
என்னென்று ஒரே முறை சொல்லலாமா…..

ஆண் : கன்னத்திலா உடல் வண்ணத்திலா
கன்னத்திலா உடல் வண்ணத்திலா
மாங்கனி ஊறும்
செவ்வாயின் கிண்ணத்திலா

பெண் : ஆ ஹாஹஹா

ஆண் : முத்து போல் உண்டாவது
முல்லை பூ செண்டாவது
இன்னும் நான் சொல்லாததை
சொல்லலாமா

பெண் : சொல்லுங்களேன்
பெண்ணை வெல்லுங்களேன்
சொல்லுங்களேன்
பெண்ணை வெல்லுங்களேன்
வண்ண தோளோடு தோள் சேர
நில்லுங்களேன்

பெண் : பக்திக்கும் இல்லாதது
முக்திக்கும் விடாதது
தித்திக்கும் அதா இது என்ன இன்பம்

ஆண் : இன்பம் வரும்
அது இன்னும் வரும்
இன்பம் வரும்
அது இன்னும் வரும்
கொஞ்சம் நாளாக நாளாக
சொர்க்கம் வரும்

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் : மன்றத்தில் விழா வரும்
மஞ்சத்தில் நிலா வரும்
என்றைக்கும் இதே சுகம் விளையாடும்

பெண் : மஞ்சத்திலா
உங்கள் நெஞ்சத்திலா…..
மஞ்சத்திலா
உங்கள் நெஞ்சத்திலா….
அந்த மணநாளை ஊர் கேட்க
சொல்லட்டுமா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் : யாரோடும் பேசக் கூடாது
பெண் : ஆகட்டும்
ஆண் : கேட்டாலும் சொல்லக் கூடாது
பெண் : ஆகட்டும்

பெண் : நீ மட்டும் மாறக் கூடாது
ஆண் : ஆகட்டும்
பெண் : வேறொன்றை நாடக் கூடாது
ஆண் : ஆகட்டும்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..
ஆஅ…..ஆஅ..ஆஅ…
ஹா ஹ ஹ ஹா
ஆண் : ஆஆஹா ஹா…….

Tags:
error: Content is protected !!