Theekkoluthi Song Lyrics – From Bison Kaalamaadan Song Lyrics
Share

Movie Name : Bison Kaalamaadan
Song Name : Theekkoluthi – Song Lyrics
Music : Nivas K Prasanna
Singers : Unknown
Lyricist : Mari Selvaraj
Music Credits : Think Music India
ராசாத்தி
தீ மூட்டி தீ மூட்டி
நெஞ்சாங்கூட்ட பத்த வெச்ச
காட்டுப்பேச்சி நீ
காட்டுப்பேச்சி நீ
தாலாட்டி தாலாட்டி
பச்சபுள்ள ஏங்க வெச்ச
பாட்டுப்பேச்சி நீ
பாட்டுப்பேச்சி நீ
அடியே
அடியே
ராசாத்தி உன் நெனப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி
அடியே
போற நீ வாக்கப்பட்டு
உடைஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
அடியே போடி… நீ போடி…
உன்னத் தேடி என்னத் தேடி
என் உசுரும் ஓடுது
உடம்போ வேகுது மஞ்சனத்தி
அடியே மஞ்சனத்தி
நீ தீ கொளுத்தி தீ கொளுத்தி
தீ கொளுத்தி தீ கொளுத்தி
அடியே மச்சி வீட்டு மயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆச துடிக்குதடி
அடியே மச்சி வீட்டு மயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி
உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி
உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி
அடியே
அடியே
பொட்டுவச்ச என் ரத்தினமே
வரஞ்சு வச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகையில
தீ பிடிச்சு நான் சாவுறேனே
தீ பிடிச்சு நான் சாவுறேனே
தீ பிடிச்சு நான் சாவுறேனே
நீ மலையேறி போற
நான் மண்ணோடு போறேன்
நீ கரையேறி போற
நான் கடலோடு போறேன்
நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒளியோடு ஒளியாக
வலியோடு வலியாக
எங்கேயோ போற
எங்கேயோ போற
எங்கேயோ போற…
ராசாத்தி உன் நெனப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி
போற நீ வாக்கப்பட்டு
உடைஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
அடியே போடி… நீ போடி…
உன்னத் தேடி என்னத் தேடி
என் உசுரும் ஓடுது
உடம்போ வேகுது மஞ்சனத்தி
அடியே மஞ்சனத்தி
நீ தீ கொளுத்தி தீ கொளுத்தி
தீ கொளுத்தி தீ தீ தீ கொளுத்தி தீ தீ தீ கொளுத்தி
அடியே ஒத்த சொல்லு ஒயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆச துடிக்குதடி
அடியே ஒத்த சொல்லு ஒயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி
உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆச துடிக்குதடி
உன் பாசம் எரியுதடி
உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
உன் பாசம் எரியுதடி
என் ஆச துடிக்குதடி
ஏ….
ஏ…..

Follow Us