Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Poovizhi Vaasalil Song Lyrics

Share

Movie Name : Dheepam – 1977
Song Name : Poovizhi Vaasalil Song Lyrics
Music : Ilayaraja
Singers: KJ Yesudas, S Janaki
Lyricist: Pulamaipithan

Poovizhi Vaasalil Yaaradi Vandhadhu
Kiliye Kiliye Ilam Kiliye Kiliye
Angu Varavaa Thaniye
Mella Thodavaa Kaniye
Indha Punnagai Enbadhu
Sammadham Endru Alaikkudhu Ennaiye..e

Poovizhi Vaasalil Yaaradi Vandhadhu
Kiliye Kiliye Ilam Kiliye Kiliye
Angu Varavaa Thaniye
Mella Thodavaa Kaniye
Indha Punnagai Enbadhu
Sammadham Endru Alaikkudhu Ennaiye

Arumbaana Kaadhal Poovanadhu
Anubava Sugangalai Thedudhu
Ninaithaalum Nenjam Thenaanadhu
Nerungavum Mayangavum Oodudhu
Mogam Varum Oruvelaiyil
Naanam Varum Maruvelaiyil
Irandum Poraadudhu..
Thudikkum Ilamai Adakkum Penmai

Poovizhi Vaasalil Yaaradi Vandhadhu
Kiliye Kiliye (Aahaa)
Ilam Kiliye Kiliye (Aahaa)
Angu Varavaa Thaniye (Aahaa)
Mella Thodavaa Kaniye (Aahaa)
Indha Punnagai Enbadhu
Sammadham Endru Alaikkudhu Ennaiye (Aahaahaa…)

Ilamaalai Thendral Thaalaattudhu
Ilamaiyin Kanavugal Aadudhu
Malaivaazhai Kaalgal Thallaadudhu
Maragadha Ilai Thirai Podudhu
Kaar Megamo Kulalaanadhu
Oorgolamaai Adhu Pogudhu
Naalai Kalyaanamo?
Enakkum Unakkum Porutham Thaane

Poovizhi Vaasalil Yaaradi Vandhadhu
Kiliye Kiliye Ilam Kiliye Kiliye
Ingu Varalaam Thaniye
Mella Thodalaam Enaiye
Indha Punnagai Enbadhu
Sammadham Endru Alaikkudhu Unnaiye

Kalainthaadum Koondhal Paai Podumo?
Kalaiyidhu Arimugam Vendumo?
Asainthaadum Oonjal Naamaagavo?
Navarasa Ninaivugal Thondrumo?
Poomeniyo Malar Maaligai
Ponmaalaiyil Oru Naaligai
Naalum Naanaadavo?
Anaikkum
Thudikkum
Silirkkum Meni

Poovizhi Vaasalil Yaaradi Vandhadhu
Kiliye Kiliye (Aahaa)
Ilam Kiliye Kiliye (Aahaa)
Ingu Varalaam Thaniye (Aahaa)
Mella Thodalaam Enaiye (Aahaa)
Indha Punnagai Enbadhu
Sammadham Endru Alaikkudhu Unnaiye (Aahaahaa)

================================

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று அழைக்குது என்னையே

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று அழைக்குது என்னையே

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒருவேளையில்
நாணம் வரும் மறுவேளையில்
இரண்டும் போராடுது..
துடிக்கும் இளமை அடக்கும் பெண்மை

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே (ஆஹா)
இளம் கிளியே கிளியே (ஆஹா)
அங்கு வரவா தனியே (ஆஹா)
மெல்ல தொடவா கனியே (ஆஹா)
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று அழைக்குது என்னையே (ஆஹாஹா )

இளமாலை தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலைவாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர் கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ ?
எனக்கும் உனக்கும் பொருத்தம்தானே

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே
இங்கு வரலாம் தனியே
மெல்ல தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று அழைக்குது உன்னையே

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ?
கலையிது அறிமுகம் வேண்டுமோ?
அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ?
நவரச நினைவுகள் தோன்றுமோ?
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நானடாவோ?
அணைக்கும்
துடிக்கும்
சிலிர்க்கும் மேனி

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே (ஆஹா)
இளம் கிளியே கிளியே (ஆஹா)
இங்கு வரலாம் தனியே (ஆஹா)
மெல்ல தொடலாம் எனையே (ஆஹா)
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று அழைக்குது உன்னையே (ஆ.ஹா.)

Tags:
error: Content is protected !!