Kannan Varugindra Neram Karaiyoram Song Lyrics – Lord Krishna Song Lyrics
Share
Movie Name : Lord Krishnan – Devotional Song
Song Name : Kannan Varugindra Neram Karaiyoram – Song Lyrics
Music : N/A
Singers : N/A
Lyricist : Oothukkadu Venkata Kavi
Kannan Varugindra Neram Karaiyoram
Tendral Kandu Kozhithadhu Paarum
Gaanatthidai Mona Kuyil Osaikkinyaana
Tharamaana Kuzhal Isai Kelum
Pona Aaviyellam Kooda Meelum
Kannan Varugindra Neram Karaiyoram
Tendral Kandu Kozhithadhu Paarum
Salla Salanamittodum Nadhi Paadum
Vanam Thangi Thangi Suzhandraadum Nalla
Thudhi Paadidum Adiyaaravar Manamaanadhu Idu Pol Ena
Thulli Thulli Kudhitthaadum
Pugazh Solli Solli Isai Paadum
Kannan Varugindra Neram Karaiyoram
Tendral Kandu Kozhithadhu Paarum
Kannan Nagai Pole Mullai Inai Illai Endru
Kandadhum Vandondrum Vallai Idu
Kanavo Alla Nanavo Ena Karudaadiru Maname
Oru Kaalamum Poiyondrum Sollen
Engal Kannan Andri Veru Illen
Kannan Varugindra Neram Karaiyoram
Tendral Kandu Kozhithadhu Paarum
Thaazhai Madal Neerthu Nokkum Mullai Paarkum
Enna Sowkkiyamo Endru Ketkum Ada
Mozhi Pesida Iduvo Pozhudenavo Varum Madhavanin
Mutthu Mudiyinil Servom Ange
Mettha Mettha Pesi Nervom
Kannan Varugindra Neram Karaiyoram
Tendral Kandu Kozhithadhu Paarum
Anda Gaanatthidai Mona Kuyil Osaikkinyaana
Tharamaana Kuzhal Isai Kelum
Pona Aaviyellam Kooda Meelum
===========================================
கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையானத்தரம்
ஆனக் குழலிசை கேளும் – போன
ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்)
சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும்
வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் – நல்ல
துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என
துள்ளி துள்ளிக் குதித்தோடும் – புகழ்
சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்)
கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை – என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை – இது
கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்)
தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும்
என்ன சௌக்கியமோ என்று கேட்கும் – அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் – அங்கே
மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)
Follow Us