Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Endhan Ponvanname Song Lyrics

Share

Movie Name : Naan Vazhavaippen – 1979
Song Name : Endhan Ponvanname Song Lyrics
Music : Ilayaraja
Singer : TM Soundrarajan
Lyricist : Vaali

Endhan Ponnvanname Anbu Poovanname
Endhan Ponnvanname Anbu Poovanname
Nenjil Poraattamaa? Kannil Neerottamaa?
Adhai Naan Paarkkava Manam Thaan Thangumaa
Endhan Ponnvanname Anbu Poovanname

Kovil Illai Endraal Dheivam Illai
Inge Neeyillai Yen Kanne Naanum Illai
Vaanam Illai Endraal Madhiyum Illai
Undhan Vaarthai Illai Endraal Geedham Illai
Nee Vandha Thaal Thaane Poo Vanthadhu
Nee Vaadinaal Vanna Poo Vaadume
En Raajaathi Kanne Kalangathiru…
Endhan Ponnvanname Anbu Poovanname

Ponnai Kanden Athil Unnai Kanden
Kaalai Pozhudhai Kanden Indha Kathirai Kanden
Ennai Kanden Nenjil Uravai Kanden
Neeyum Illai Endraal Naanum Enge Selven
Thaai Seithadhe Thavam Naam Vanthadhu
Thaai Kondadhe Varam Naam Vaazhvadhu
En Raajaathi Kanne Kalangathiru…
Endhan Ponnvanname Anbu Poovanname

Kallam Illai Nenjil Kabadam Illai
Naam Kanneer Sindha Oru Niyaayam Illai
Kaalam Varum Angu Dheivam Varum
Andha Naalum Varum Nalla Vaazhvum Varum
Kaalam Thanai Naan Maara Vaippen
Kanne Unnai Naan Vaazha Vaippen
En Raajaathi Kanne Kalangathiru…

Endhan Ponnvanname Anbu Poovanname
Nenjil Poraattamaa? Kannil Neerottamaa?
Adhai Naan Paarkkava Manam Thaan Thangumaa
Endhan Ponnvanname Anbu Poovanname

================

எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா? கண்ணில் நீரோட்டமா?
அதை நான் பார்க்கவா? மனம் தான் தாங்குமா?
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே…..

கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயல்லையே கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு…
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே….

பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு.
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே….

Tags:
error: Content is protected !!