Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Aatha Thottilile Song Lyrics

Share

Movie Name : Devarattam – 2019
Song Name : Aatha Thottilile Song Lyrics
Music : Nivas K. Prasanna
Singer : Nivas K. Prasanna
Lyricist : Ra. Thanikodi

Oppari : ……………………………

Aaththa Thottililae Arai Naali Aadaliyae
Appan Thozhmela Ambaari Yeralaiyae…Aaa
Aaththa Thottililae Arai Naali Aadaliyae
Appan Thozhmela Ambaari Yeralaiyae

Thaai Ootti Thingakalaiyae
Thagapan Idam Thangalaiyae
Neeyootti Valarthapullai
Thee Mootta Nikkiranae

Thaai Ootti Thingakalaiyae
Thagapan Idam Thangalaiyae
Neeyootti Valarthapullai
Thee Mootta Nikkiranae

Ammaannu Palliyilae
Arichuvadi Padikkaiyilae
Akkaa Thaan Ellaamnu
Enni Enni Valandhenae

Kunjukku Panjaaram
Kodangaiyilae Irunthathadi
Panjaaram Kalanthathadi
Paathi Uyir Arunthathadi

Oppari : ………………………………..

Kudicha Thaai Paalu
Kumattil Irukkaiyilae
Idi Vanthu Vizhunthathunnu
Ellaarum Sonnaaga
Paasatha Parikoduthu
Paadhivali Nikkirenae
Vamsamtha Palikoduthu
Valiyaththu Ponenae

Ellaamaa Thaan Irunthu
Iththu Ponavalae
Sollaama Ponadhenga
Thudikkuthadi En Usuru

Ee Erumbu Andum-Nnu
Imaikkaama Irunthavalae
Oorumakka Vanthiruchu
Urunguriyae Mulippatheppo

Maadu Alaralaiyae
Valipoonai Marikkalaiyae
Kaada Saakkuruvi
Kaththi Thaan Kolaikaliyae
Kudi Kavura Poguthunnu
Kevuliyum Sollaliyae
Maada Velakkananju
Maranaththa Kuraliyae

Kattililae Kuththa Vachu
Kaal Amukka Nenachirunthen
Aal Illaa Kattilila
Kannurakkam Kondathu Yen

Oor Maala Naan Vaangi
Un Aasi Vaangumunnae
Neer Maalai Oor Edukka
Nedunthookkam Kondathu Yen

Eeraaru Saarathil
Yetri Vara Naanirukka
Ooraaru Adikkullae
Ulluranga Ponathu Yen

En Aaththa…Aaaa….Aa
En Aaththa…
En Aaththa…

Oppari : ………………………………..

Aaththaa……

======================

ஒப்பாரி : ……………………………..

ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே…ஆஅ
ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே…ஆஅ

தாய் ஊட்டி திங்கலையே
தகப்பன் இடம் தங்களையே
நீயூட்டி வளர்த்தபுள்ள
தீ மூட்ட நிக்கிறானே

தாய் ஊட்டி திங்கலையே
தகப்பன் இடம் தங்களையே
நீயூட்டி வளர்த்தபுள்ள
தீ மூட்ட நிக்கிறானே

அம்மான்னு பள்ளியிலே
அரிச்சுவடி படிக்கையிலே
அக்காதான் எல்லாம்னு
எண்ணி எண்ணி வளந்தேனே

குஞ்சுக்கு பஞ்சாரம்
கொடங்கையிலே இருந்ததடி
பஞ்சாரம் கலந்ததடி
பாதி உயிர் அருந்ததடி

ஒப்பாரி : ……………………………..

குடிச்ச தாய் பாலு
குமட்டில் இருக்கையிலே
இடி வந்து விழுந்ததுன்னு
எல்லாரும் சொன்னங்க
பாசத்த பறிகொடுத்து
பாதிவழி நிக்கிறேனே
வம்சத்த பலிகொடுத்து
வழியத்து போனேனே

எல்லாமாதான் இருந்து
இத்து போனவளே
சொல்லாம போனதெங்க
துடிக்குதடி என் உசுரு

ஈ எறும்பு அண்டும்னு
இமைக்காம இருந்தவளே
ஊருமுக்க வந்திருச்சு
உறங்குறியே முழிப்பதெப்போ

மாடு அலறலையே
வலிபூனை மறிகலையே
காட சாக்குருவி
கத்திதான் கொலைக்கலையே
குடி கவுர போகுதுன்னு
கெவுளியும் சொல்லலையே
மாட வெளக்கனஞ்சு
மரணத்த கூறலையே

கட்டிலிலே குத்த வச்சு
கால் அமுக்க நினைச்சிருந்தேன்
ஆள் இல்லா கட்டிலிலே
கண்ணுறக்கம் கொண்டது ஏன்

ஊர் மாலை நான் வாங்கி
உன் ஆசை வாங்குமுன்னே
நீர் மாலை ஊர் எடுக்க
நெடுந்தூக்கம் கொண்டது ஏன்

ஈராறு சாரத்தில்
ஏற்றி வர நானிருக்க
ஓராரு அடிக்குள்ளே
உள்ளுறங்க போனது ஏன்

என் ஆத்தா….ஆஅ….ஆ
என் ஆத்தா….
என் ஆத்தா….

ஒப்பாரி : …………………………….

ஆத்தா……………….

Tags:
Previous Article
error: Content is protected !!