Home » 1990 - 1999 » Megangal Ennai Thottu Song Lyrics – Amarkalam Movie Song Lyrics

Megangal Ennai Thottu Song Lyrics – Amarkalam Movie Song Lyrics

Movie Name : Amarkalam – 1999
Song Name : Meghangal Ennai Thottu
Music : Bharadwaj
Singer : SP Balasubramanyam
Lyricist : Vairamuthu

Male :
Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

Dhegangal Ondrirandu Kadandhadhundu
Manam Sillendru Sila Podhu Silirthadhundu

Moghaname Unnai Pola Ennai Yaarum
Moochuvarai Kollaiyittu Ponadhillai

Aaga Motham En Nenjil Unnai Pola
Eri Amilathai Veesiyavar Yevarumillai ……

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Pirivondru Nerumendru Theriyum Penne
En Piriyathai Adhanaal Kuraikka Maatten

Eriyum Udalendru Theriyum Penne
En Ilamaikku Theeyittu Erikka Maatten ……

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Kannimaiyin Saamarangal Veesum Kaatril
En Kaadhal Manam Thundu Thundaai Udaiya Kanden

Thundu Thundaai Udaindha Mana Thugalaiyellaam
Adi Thooyavale Unakkul Tholaithu Vitten ……

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Sevvaayil Jeevaraasi Undaa Enrde
Adi Dhinandhorum Vingyaanam Thedal Kollum

Un Sevvaayil Ulladhadi Enadhu Jeevan
Adhu Theriyaamal Vingyaanam Edhanai Vellum ?

Evvaaru Kannirendil Kalandhu Ponen ?
Adi Evvaaru Madiyodu Tholaindhu Ponen ?

Ivvaaru Thanimaiyil Pesi Konde
En Iravinai Kavidhaiyaai Mozhi Peyarthen ……

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Moodi Moodi Vaithaalum Vidhaigalellaam
Mannai Mutti Mutti Mulaippadhu Uyirin Saatchi

Odi Odi Pogaadhe Oomai Penne
Naam Uyirodu Vaazhvadharku Kaadhal Saatchi ……

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

Meghangal Ennai Thottu Ponadhundu
Sila Minnalgal Ennai Urasi Ponadhundu

Dhegangal Ondrirandu Kadandhadhundu
Manam Sillendru Sila Podhu Silirthadhundu

Moghaname Unnai Pola Ennai Yaarum
Moochuvarai Kollaiyittu Ponadhillai

Aaga Motham En Nenjil Unnai Pola
Eri Amilathai Veesiyavar Yevarumillai

தமிழில் வரிகள் :

ஆண் :
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னை போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை

ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னை போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை …….

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்

எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன் ……

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டு துண்டாய் உடையக் கண்டேன்

துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன் ……

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் ?

எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் ?
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் ?

இவ்வாறு தனிமையில் பேசிக் கொண்டே
என் இரவினை கவிதையாய் மொழி பெயர்த்தேன் ……

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி

ஓடி ஓடி போகாதே ஊமைப் பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி ……

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னை போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை

ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னை போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics